Monday, September 9, 2013

தாமோதர் வேலி கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு

தாமோதர் பள்ளத்தாக்கில் இயற்கையின் சீற்றங்களால் ஏற்பட்ட பேரழிவை தடுக்கும் விதத்தில் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் அமைப்பு நிறுவப்பட்டது. நிறுவப்பட்ட நாள் முதல் தொடர்ந்து சீரிய முறையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலுள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகளும் காலி இடங்களும்

தாமோதர் வேலி நிறுவனத்தில் எக்ஸிக்யூடிவ் பினான்ஸ் பிரிவில் 3ம், இன்ஜினியரிங் அஸிஸ்டெண்ட்/போர்மேன் பிரிவில் எலக்ட்ரிகலில் 15ம், மெக்கானிகலில் 7ம், சிவிலில் 6ம், சி அண்டு ஐ பிரிவில் 4ம், கம்யூனிகேஷன் மற்றும் ஐ.டி., பிரிவுகளில் தலா 1ம் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்

டி.வி.சி.,யின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் ஏ.எம்.ஐ.இ., படிப்பு அல்லது பட்டப் படிப்பு அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். பினான்ஸ் பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., அல்லது எம்.பி.ஏ.,  பினான்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மற்றவை

தாமோதர் வேலி கார்ப்பரேஷனின் மேற்கண்ட காலி இடங்கள் ஸ்கிரீனிங் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவி கிடைத்தால் மாதம் 15ஆயிரத்து 600 முதல் ரூ.39 ஆயிரத்து 100 ஊதியம் பெற முடியும்.

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.09.2013

இணையதள முகவரி : www.dvcindia.org/M1DEPARTMENTALADVERTISEMENT201398.pdf

கடல்சார் நிறுவனம் வழங்கும் பொதுமுறை மாலுமி பயிற்சி

தூத்துக்குடி: தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம், 6 மாத காலஅளவுள்ள பொதுமுறை மாலுமி பயிற்சியை வழங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பயிற்சி, ஆங்கிலத்தில் PRE-SEA COURSE FOR GENERAL PURPOSE RATINGS என்று அழைக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு மொத்தம் 40 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழக அரசின் சட்டப்படி, இடஒதுக்கீடு பின்பற்றப்படும். ஆங்கில வழியில் பயிற்சி வழங்கப்படும்.

சேரும் தகுதி

இப்பயிற்சியில் சேர விரும்பும் ஆண், 10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும். ஒருவேளை, அவர் 10ம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் 40% மதிப்பெண்களைப் பெற்றிருக்கவில்லையெனில், அவர் 12ம் வகுப்பில், ஆங்கிலப் பாடத்தில் 40% மதிப்பெண் பெற்றிருந்தால் அது கணக்கில் எடுக்கப்படும்.

வயது

குறைந்தபட்சம் 17.5 வயதும், அதிகபட்சம் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கட்டணம்

இப்படிப்பிற்கான கட்டணம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம்.

இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கடைசித் தேதி அக்டோபர் 8. இப்படிப்பு தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள http://www.tn.gov.in/tnma/GPRatingCourse/prospectus.pdf என்ற வலைதளம் செல்க.

மத்திய அரசுப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி.,தேர்வு அறிவிப்பு

இந்திய அரசின் அமைச்சகப் பதவிகளையும், அரசுப் பணியிடங்களையும் யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 4 பிரிவுகளின் கீழான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகளும் காலி இடங்களும்

யு.பி.எஸ்.சி., அமைப்பின் சார்பாக டெபுடி சூபரின்டெண்டன்ட் ஆர்க்கியாலஜி பிரிவில் 8 இடங்களும், லெக்சரர் பிரிவில் 1ம், சயிண்டிஸ்ட் பி பிரிவில் 21ம், ஆயுர்வேதா பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 5ம், யுனானி பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 3 என்ற அளவில் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்

யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிக பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆர்க்கியாலஜிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் வரலாறு, ஆர்க்கியாலஜி, சமஸ்கிருதம், பெர்சியன், பிரக்ரித், பாலி, அராபிக், ஆந்த்ரபாலஜி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முது நிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வரலாறு, தொல்பொருள் தொடர்புடைய இரண்டு வருட ஆராய்ச்சி அனுபவம் கொண்டவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்க்கியாலஜிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சயிண்டிஸ்ட் பி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தாவரவியல் பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சித்தா மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆயுர்வேதப் பிரிவில் பட்டப் படிப்பும், யுனானி மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க இதே பிரிவில் பட்டப் படிப்பும் தேவைப்படும்.

இதர தகவல்கள்

யு.பி.எஸ்.சி.,யின் மேற்கண்ட பதவிகளுக்கு ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 12.09.2013

இணையதள முகவரி: http://upsconline.nic.in/ora/candidate/VacancyNoticePub.php