Monday, September 9, 2013

கடல்சார் நிறுவனம் வழங்கும் பொதுமுறை மாலுமி பயிற்சி

தூத்துக்குடி: தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம், 6 மாத காலஅளவுள்ள பொதுமுறை மாலுமி பயிற்சியை வழங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பயிற்சி, ஆங்கிலத்தில் PRE-SEA COURSE FOR GENERAL PURPOSE RATINGS என்று அழைக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு மொத்தம் 40 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழக அரசின் சட்டப்படி, இடஒதுக்கீடு பின்பற்றப்படும். ஆங்கில வழியில் பயிற்சி வழங்கப்படும்.

சேரும் தகுதி

இப்பயிற்சியில் சேர விரும்பும் ஆண், 10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும். ஒருவேளை, அவர் 10ம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் 40% மதிப்பெண்களைப் பெற்றிருக்கவில்லையெனில், அவர் 12ம் வகுப்பில், ஆங்கிலப் பாடத்தில் 40% மதிப்பெண் பெற்றிருந்தால் அது கணக்கில் எடுக்கப்படும்.

வயது

குறைந்தபட்சம் 17.5 வயதும், அதிகபட்சம் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கட்டணம்

இப்படிப்பிற்கான கட்டணம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம்.

இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கடைசித் தேதி அக்டோபர் 8. இப்படிப்பு தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள http://www.tn.gov.in/tnma/GPRatingCourse/prospectus.pdf என்ற வலைதளம் செல்க.

No comments:

Post a Comment